×

டாக்டர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி காரைக்காலில் அரசு டாக்டர்கள் நர்சுகள் திடீர் ஸ்டிரைக்: நோயாளிகள் தவிப்பு

காரைக்கால்: காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன்-மாலதி தம்பதியரின் மகன் பால மணிகண்டன்(13). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியின் தாய் விக்டோரியா சகாயராணி, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் பால மணிகண்டன் இறந்தான். இந்நிலையில் அரசு பொது மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதைதொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து காரைக்கால் அரசு மருத்துவமனை டாக்டர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் டாக்டர்களின் சஸ்பெண்டை ரத்து செய்யக் கோரியும், கொரோனா காலத்தில் அயராது பாடுபட்ட இரு மருத்துவர்கள் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்க வலியுறுத்தியும் காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவமனை முன்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவு முற்றிலும் முடங்கியது.  சிகிச்சைக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்த 500க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் போராட்டத்தால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்களின் அறிவிப்பை ரத்து செய்யும் வரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர் போராட்டம் தொடரும். வரும் 12ம் தேதி முதல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாகி ஏனாம் ஆகிய பகுதிகளிலும் மருத்துவர்கள், செவிலியர்களின் போராட்டம் நடைபெறும் என மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்….

The post டாக்டர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி காரைக்காலில் அரசு டாக்டர்கள் நர்சுகள் திடீர் ஸ்டிரைக்: நோயாளிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Bala Manikandan ,Rajendran-Malathi ,Karaikal Nehru Nagar ,Ivan ,Dinakaran ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...